Blog
1ஆந் திகதி தை 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை விஸ்வர்கர்மகுல சங்கத்திற்கான பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் திரு தா.க. பென்னுத்துரை, உப தலைவர் திரு மு. நாகலிங்கம், செயலாளர் திரு இ.குணேந்திரன், உப செயலாளர் திரு பொ. சிவானந்தன், பொருளாளர் திரு க.ச. கந்தையாப்பத்தர் ஆகிய நிர்வாக சபை உறுப்பினர்களால், துவட்டா மன்னனுக்கு ஒரு மணி மண்டபம் கட்டப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி 22 ஆந்திகதி தை மாதம் 1978 ஆம் ஆண்டு மணி மண்டபத்திற்கான அத்திவாரம் இடப்பட்டு பத்திரிப்பு அமைக்கப்பட்டு, மண் நிரப்பப்பட்டு மண்டபம் கட்ட தேவையான கொன்கிறீற் கற்களும் அரிந்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் பொருளாதார காரணங்களால் மண்டபம் கட்டும் பணி இடை நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் 11 ஆந்திகதி ஆனி மாதம் 1986 ஆம் ஆண்டு மீண்டும் இப்பணி தொடங்கியிருந்த போதும், இந்திய இராணுவ கெடுபிடிகள் மற்றும் நிர்வாக குழுவினர்களுக்கிடையே இருந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலும் திரு து.பரமாணந்தம், திரு சி.பத்மராசா, திரு சண்முகம் நந்தகோபால் ஆகியேரின் முயற்சியால் மந்தகதியில் வேலைகள் நகர்த்தப்பட்டன.
இதன் பின்னர் பதினாறாந்திகதி ஆடி மாதம் 1988 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக குழுவின் பகீரதப் பிரயத்தனம் மற்றும் விடாமுயற்சியின் காரணமாக, மண்டப வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு 06 ஆந்திகதி மாசி மாதம் 1989 ஆம் ஆண்டு மிக சிறப்பாக திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இதன் பின்னர் நடைபெற்ற போர்ச்சூழல் காரணமாக இம்மண்டபம் முற்றாக அழிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டது.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் திரு தி. கிருஸ்ணகுமார், உப தலைவர் திரு செ. கோபாலகிருஸ்னன், செயலாளர் திரு ஜே. மனோகர், உப செயலாளர் திரு க. சிவம், பொருளாளர் திரு வ.க. துரைசிங்கம் ஆகிய நிர்வாக சபை உறுப்பினர்களால் இம்மண்டபத்தை மீண்டும் கட்டி முடிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேர்கொள்ளப்பட்டன.
இதன்பின் தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் செயல்குழு உறுப்பினர்களாளான தலைவர் திரு தி. கிருஸ்ணகுமார், செயலாளர் திரு ஜே. மனோகர், பொருளாளர் திரு கோ. கோபாலகிருஸ்ணன் கோகுலராம், உப தலைவர் திரு செ. திருமூர்த்தி, உபசெயலாளர் திரு ச.ஜெகனாதன் ஆகியோரின் முயற்சியால் முதல் படியாக 1 ஆந்திகதி புரட்டாதி மாதம் 2022 ஆம் ஆண்டு மீண்டும் இம்மண்டபத்திற்காண அத்திவாரம் புதிய இடத்தில் இடப்பட்டது.
புதிய இந்த மண்டபமானது அன்னதான மடம், திருமண மண்டபம், தங்குமிடம், குருகுலம், ஆன்மீக பயிற்சிக்கூடம் மற்றும் தாக சந்தி நிலயம் என பல நேக்கங்களை நிறைவு செய்யக்கூடிய மண்டபமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றமை இதன் சிறப்பம்சமாகும். இதன் முதல் கட்டமான அன்னதான மடம், தாக சந்தி நிலயம் மற்றும் தங்குமிட வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு, வருகின்ற 25 ஆந்திகதி தை மாதம் 2025 ஆம் ஆண்டு நன் நாளில் மண்டபத்திற்கான படம் வைத்து பால் காய்ச்சும் நிகழ்வை நடாத்த சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிகழ்வை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் வரவேற்பதோடு இம்மண்டபத்தின் அடுத்த கட்ட வேலைகளை பூர்த்தி செய்வதற்கு உலகெங்கும் வாழும் விஸ்வகர்ம குல மக்களின் பங்களிப்பையும் இறைவனின் நல்லாசியையும் வேண்டி நிற்கிறார்கள்.
Account Name : All ceylon Visvakarmakula Sankam
Account No : 74690372
Bank : BANK OF CEYLON
Branch : JAFFNA
SWIFT CODE : BCEYLKLX005
