மகா துவட்டா – பால் காய்ச்சும் நிகழ்வு

25 ஆந்திகதி தை மாதம் 2025ஆம் ஆண்டு மகாதுவட்டா மணி மண்டபத்திற்கான‌ படம் வைத்து பால் காய்ச்சும் நிகழ்வை அகில இலங்கை விஸ்வகர்மகுல சங்கத்தினர் வெகு சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றனர்.

1 ஆந்திகதி புரட்டாதி மாதம் 2022ஆம் ஆண்டு இம் மண்டபத்திற்கான அத்திவாரம் புதிய இடத்தில் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய‌ இந்த மண்டபமானது அன்னதான மடம், திருமண மண்டபம், தங்குமிடம், குருகுலம், ஆன்மீக பயிற்சிக்கூடம் மற்றும் தாக சந்தி நிலயம் என பல நேக்கங்களை நிறைவு செய்யக்கூடிய மண்டபமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

தற்போதைய நிர்வாக குழுவின் அயராத உழைப்பினாலும், விஸ்வகர்மகுல மக்களின் ஒத்துழைப்பினாலும் இதன் முதல் கட்டமான அன்னதான மடம், தாக சந்தி நிலயம் மற்றும் தங்குமிட வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு பாவனைக்கு விடப்பட்டிருக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This Post Has 3 Comments

  1. Marichelvan M

    விஸ்வகுல பணி சிறக்க வாழ்த்துக்கள்

Leave a Reply